பிக் பொஸ் வீட்டில் இருந்தவர்களும் வெளியில் ரசிகர்களும் ஓவியாவை இலக்கு வைத்து நடந்து கொண்டமை தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக ரைசா தெரிவித்துள்ளார்.
பிக் பொஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், ரைசா இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தான் ஒரு மொடல் என்பதால் எப்பொழுதும் சாதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்து பிக் பொஸ் வீட்டில் அமைதியாக இருந்ததாகவும் இதன்படி, சோறு சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பொஸ் வீட்டில் இருந்த காரணத்தால் தன்னைத் தானே உணரக்கூடிய நிலை ஏற்பட்டதாகவும், அத்துடன், ஓவியாவுடன் அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பிறகு இருவரும் நட்பாகி விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தான் பிக் பொஸ் வீட்டில் இருந்த காலத்தில் யாருடனும் தானாக சண்டை போட வில்லை எனவும் அதிகமாக ஓவியாவை பற்றி எல்லோரும் பேசும் போது தனக்கு கோவம் வந்ததாகவும் அவர் கூறினார்.