பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவடைந்தது.
மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர்.
இந்த நால்வரில் ஆரவ் நேற்று பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார். மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட அணைத்து பிரபலங்களும் வந்தனர்.
நமீதாவை தவிர அனைவரும் இந்த பிக் பாஸ் இறுதிப் போட்டியில் அணைத்து பிரபலங்களும் பங்கு கொண்டனர். மேலும் காயத்ரி, சுஜா ஜூலி மேலும் சிலர் நடனம் ஆடி நிகழ்ச்சியில் மக்களை மகிழ்வித்தனர்.
கணேஷ் வெங்கட்ராமனை அவரது மனைவி நிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு அழைத்து வந்தார்.
பிறகு ஓவியாவிடம் பிக் பாஸ் ஒரு கடிதம் கொடுத்ததாக கோரி கமல் அந்த கடிதத்தை படிக்க சொன்னார். ஓவியாவிற்கு தமிழ் படிக்க தெரியாததால் கமல் அந்த கடிதத்தை படித்து ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ஹரிஷ்சை அழைத்து வர சொன்னார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஓவியா ஹரிஷ்சை அழைப்பதற்கு முன் ஆரவ்வை பார்த்து சிரித்தார். அதற்கு ஆரவ்வும் ஓவியாவை பார்த்து சிரித்தார்.
பிறகு அவர் ஹரிஷ்சை மேடைக்கு அழைத்து வந்தார். பிறகு கமல் வீட்டிற்குள் சென்று சினேகன் மற்றும் ஆரவ்வை மேடைக்கு அழைத்து வந்து நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான் என்று அறிவித்தார்.
ஆரவ் வெற்றி பெற்றதற்கு பிறகு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட்டை தான் பதிவுசெய்தார்.
Thanks for all the love and support..Dedicate the title to all of you
— Arav (@Nafeez_Arav) October 1, 2017
This is my official twitter handle…
— Arav (@Nafeez_Arav) October 1, 2017