Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / ‘பதஞ்சலி, ‘பிராண்டு’ மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உயரும்’

‘பதஞ்சலி, ‘பிராண்டு’ மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உயரும்’

புதுடில்லி : ”அடுத்த ஐந்து ஆண்டுகளில், பதஞ்சலி நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2 லட்சம் கோடி டாலராக உயரும்,” என, அதன் நிறுவனர், பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அவர், மேலும் கூறியதாவது:பதஞ்சலி, நுகர்பொருட்களுடன், புதிய துறைகளிலும் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்கள் அமைப்பது, தயாரிப்பு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உள்ளது.

இரு ஆண்டுகளில், நிறுவனத்தின் தயாரிப்பு திறன், 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய பொருட்களின் அறிமுகம் காரணமாக, விற்றுமுதல், 1 லட்சம் கோடி ரூபாயை எட்டும்.விரிவாக்கத் திட்டத்திற்காக, நிறுவனம், 5,000 கோடி ரூபாய் கடன் திரட்ட திட்டமிட்டு உள்ளது.

பதஞ்சலி, 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பல்வேறு சந்தைகளில் நுழைவது குறித்து, ஆராய்ந்து வருகிறது. அவற்றில், அடுத்த, 3 – 5 ஆண்டுகளில், 10 – -20 சதவீத சந்தை பங்கை கைப்பற்றும். இதில், ஆச்சரியப்பட எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …