Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் பியர் உற்பத்தியை அதிகரிக்க உத்தேசம்!

இலங்கையில் பியர் உற்பத்தியை அதிகரிக்க உத்தேசம்!

பியர் உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டு வருவதாக கிறிஸ்தவ மத அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கேள்வியைக் கேட்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுற்றுலாத்துறை சிறப்பாக காணப்படுகின்ற வெளிநாடுகளுக்குச் சென்று பார்த்தால் அங்கு சிறிய கடைகளிலும் கூட பியர் விற்பனை இடம்பெறுகின்றது. எமது நாட்டில் அவ்வாறான நிலைமைகள் காணப்படவில்லை. இருப்பினும், மறைமுகமாக இவ்வாறான விற்பனைகள் பல இடங்களிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருகின்றன.

இவ்வாறு மறைமுகமாக இடம்பெறும் செயற்பாடுகளைக் குறைக்கும் நோக்கத்தில்தான் மேற்படி விவகாரம் குறித்து உத்தேசிக்கப்பட்டுவருகின்றது. எவ்வாறாயினும் அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் பியர் உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும்.

பியர் உற்பத்திக்கான அனுமதி வழங்கும் பரப்பை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் பியர் உற்பத்தியை முன்னரைவிட மூன்று மடங்கு அதிகரிப்புச் செய்துள்ளதாகவும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” – என்றார். அதன் உண்மைத்தன்மை பற்றி கூறுங்கள் என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=M3jscVQr7y0

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …