பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாமே சொல்லிக்கொடுத்தபடிதான் நடக்கிறது. ஸ்கிரிப்ட்படிதான் நடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஆனால் இதனை வெளியில் வந்த போட்டியாளர்கள் எல்லாம் பெரும்பாலும் மழுப்பலான பதிலைத்தான் சொல்லி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆன வையாபுரி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி அவரிடம்,
பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாம் ஸ்கிரிப்ட் என்று சொல்கிறார்களே அது உண்மையா, மறைக்காமல் சொல்லுங்கள் என்று எல்லோருமே கேட்டோம்.
இல்லை ஸ்கிரிப்டா இருந்தா அது செயற்கையா எங்க முகத்திலேயே வெளிப்பட்டு இருக்குமே என்றார்.
மேலும் சமையல் முதல் சண்டை வரை உண்மைதான் என்றார். அவர் வெளியேறியபோது எல்லோரும் கண்ணீர் விட்டு அழுதது என் கணவர் மீது மற்றவர்கள் வைத்திருந்த அன்பை காட்டியது என்று வையாபுரியின் மனைவி ஆனந்தி கூறினார்.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw