பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இதில் பலர் எலிமினேட் ஆகி தற்போது 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.
நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள்ள நுழைந்த கமல்ஹாசன் மீண்டும் வெளியேறும் போது, சுஜா அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதாவது அவர் முன்பு ஜோக்கர் குல்லா அணிந்து, தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்றும் கூறினார்.
கமலும் கேமராவைப்பார்த்து சிவக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு இதோ உங்கள் ஜோக்கர் என்று சுஜாவை காண்பித்தார்.
சுஜா சொன்ன தொனியை பார்க்கும் போது அவருடைய அத்தான் தான் அவரின் காதலன் என தெரிகிறது.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw