Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாகாணசபைத் தேர்தலில் இழுத்தடிப்புகள் இல்லை! – ஒரேநாளில் நடக்கும் என்கிறார் அமைச்சர்

மாகாணசபைத் தேர்தலில் இழுத்தடிப்புகள் இல்லை! – ஒரேநாளில் நடக்கும் என்கிறார் அமைச்சர்

மாகாண சபைகளுக்குரிய தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும், அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலானது கலப்புமுறையிலேயே நடத்தப்படும். 70 வீதம் தொகுதிவாரியாகவும், 30 வீதம் விகிதாசார முறைமையாகவும் இருக்கும். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அதன்பின்னர் தேர்தல் நடத்தப்படும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகிவருகின்றது. வேட்பாளர் தேர்வின்போது ஒழுக்கமுள்ள  நன்மதிப்புள்ள வேட்பாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
மாகாண சபைகள் தேர்தலை தனித்தனியாக நடத்துவதால் பணவிரயம் ஏற்படுகின்றது. எனவே, ஒரேநேரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருகின்றது. அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு  விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். தேர்தலுக்கான திகதியை நாடாளுமன்றமே தீர்மானிக்கும். உள்ளூராட்சி சபைத் தேர்தல்போல் இழுத்தடிப்புகள் இடம்பெறாது.
இந்த வகையில் சட்டமூலத்தை தயாரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியதும் நாடாளுமன்றமே தேர்தலுக்கான தினத்தைத் தீர்மானிக்கும். ஆனால், இந்தத் தேர்தல் எந்தவகையிலும் ஒத்திவைக்கப்படாது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு ஏற்பட்ட நிலைமை போன்று இதற்கு ஏற்படாது” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …