Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மே தினப் பாதுகாப்புக்காக 7600 பொலிஸார் களத்தில்!

மே தினப் பாதுகாப்புக்காக 7600 பொலிஸார் களத்தில்!

நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7 ஆயிரத்து 600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் கொழும்பில் 4100 பேரும், கண்டியில் 3500 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் எனவும், இவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பாகங்களில் நடக்கவுள்ள அரசியல் கட்சிப் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பிலும் கண்டியிலும் நாளைய தினம் சிறப்புப் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …