கொழும்பை அண்மித்த பகுதியில் வைத்து மிகப் பெரிய பெறுமதியுடைய இரத்தினகல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மன்னன் மதுஷின் சகாக்களை தேடும் விசேட நடவடிக்கையின் போது குறித்த நபர் சிக்கியுள்ளார்.
பன்னிப்பிட்டிய, ஆரவ்வல பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் இரத்தினகல் மீட்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை கெசெல்வத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரத்தினகல்லின் பெறுமதி 500 முதல் 700 கோடி ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் பேலியகொடை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெழும்பு இந்திக்க சம்பத் எனப்படும் கெழுமா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் பிட்டிகல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டினை சோதனையிட்டப்பட்ட போது ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷினால் இந்த இரத்தினகல் கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.