இச் சம்பவம் நேற்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது.
குறித்த சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளன, உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு பணிப்புரை.
18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள்
நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 ,
நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17 ,
தனுரதன் (கொக்குவில்) 20 ,
பிரவீன் (நல்லூர்) 20 ,
தினேஷ் (உரும்பிராய்) 17 ,
தனுசன் (சண்டிலிப்பாய்) 18
https://www.youtube.com/watch?v=WURs5BTMQcY