அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா இல்லையா என்பது குறித்து கிழக்கு மாகாண சபையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குறித்த சட்டத்திருத்தத்துக்கு வடமத்திய மாகாண சபை ஆதரவையும், ஊவா மாகாண சபை எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தன. நேற்று மேல்மாகாண சபையில் நடைபெற்ற அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபையில் இன்று இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. பெரும்பாலும் கிழக்கில் சட்டமூலத்துக்கு ஆதரவே கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.