Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தொழில் திணைக்களத்திற்கு 191 புதிய நியமனங்கள்

தொழில் திணைக்களத்திற்கு 191 புதிய நியமனங்கள்

தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

எண்பத்தைந்து இலட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் இருபத்தாறு இலட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குகின்றனர்.

கட்டாயமாக பங்களிப்பு வழங்க வேண்டிய மேலும் பத்து இலட்சம் பேர் அளவில் காணப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்கள் அனைவரையும் பங்களிப்பு வழங்கச் செய்வதற்காக புதியதாக நியமனம் பெற்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

உரிய போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நியமனம் கிடைக்கப் பெறாதவர்களின் எதிர்ப்பு தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், ஏதேனும் வகையில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பாக விசாரணையொன்றினை மேற்கொண்டு தவறினை சீர்செய்து அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் உரியவாறு வழங்கி உத்தியோகத்தர்கள் சிறந்த சேவையை வழங்கக்கூடிய பின்னணியினை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபி.டீ.ஜே. செனெவிரத்ன, அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.என். சரணதிஸ்ஸ, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …