18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்ட வீட்டின் அறை ஒன்றில் தூங்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்து பார்த்த போது இந்த சிறுவன் சடலமாக தொங்கியதை அவதானித்து கூச்சலிட்டதை அடுத்தே பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் மூத்தபிள்ளையான இவர், கொழும்பு பகுதியில் ஆறுமாத காலம் தொழிபுரிந்து வந்த நிலையில் தற்பொழுது வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மரண விசாரணைகளை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சிறுவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




