Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

29 பேர் கொண்ட இந்தக் குழுவில்இ இரண்டு குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன.

நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர்.

அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை தமது நாட்டின் குடியேற்ற அமெரிக்கா இணங்கியிருந்தது. இதற்கமைய ஐந்தாவது தொகுதி அகதிகள் தற்போது அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …