Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நல்லூர் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்

நல்லூர் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று 158 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தமிழ் இளைஞன் ஒருவரை ஏவி விட்டு, திட்டமிட்டவாறு குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படும் நிலையில், அதன் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …