“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டை மிகவும் பயனுள்ளதாக நடத்துவதற்கான ஏற்பாட்டை கட்சியின் மத்திய குழு முன்னெடுத்துவருகின்றது” என்று மீன்பிடி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இந்த மாநாட்டை மக்களுக்குப் பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ளதாக நடத்தத் தீர்மானித்துள்ளோம்” – என்றார்.