Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது

கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

தெல்லிப்பழையைச் சேர்ந்த சந்திரநாதன் ரஜிதரன் என்பவரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இவருடன் சேர்த்து, கொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புபட்டிருந்த 11 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, யாழ். குடாநாட்டில் உள்ள காவல் நிலையங்கள் முழுமையான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளாதாகவுவும் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …