கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் பிகே குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார்.
கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த அகமது மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71.33 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முஸ்லீம் லீக் வேட்பாளரான பிகே குஞ்சாலி குட்டி 1,71, 038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மரணமடைந்த முன்னாள் எம்.பி. அகமது முஸ்லீம் கட்சியை சேர்ந்தவர். இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டது. இதனால் இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கே மலப்புரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்தது. இதை தொடர்ந்து முஸ்லிம் லீக் வேட்பாளராக குஞ்சாலி குட்டி அறிவிக்கப்பட்டார். மீண்டும் குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றதன் மூலம் மலப்புரம் மக்களவை தொகுதியை முஸ்லீம் லீக் கட்சி தக்க வைத்துக்கொண்டது.