கிழக்கு பல்கலைக்கழத்தின் மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை வளாகம் தவிர்ந்த மற்றய அனைத்து வளாகங்களும் மூடப்படவுள்ளதாகவும், இன்று 12 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.