Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் கண்ணிவெடிகள் அற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

இலங்கையில் கண்ணிவெடிகள் அற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

கடந்த 30 வருட உள்நாட்டுப் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவான மக்(MAC) நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் , 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் மக் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 2025 இல் கண்ணிவெடிகள் அற்ற தேசம் என்ற இலக்கின் அடிப்படையில் இந்த வேலைத் திட்டங்கள் இடம்பெறுகின்றன.

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பாதுகாப்பான மாவட்டம் என்று மட்டக்களப்பு மாவட்டம் இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 மாத காலப்பகுதியில் 246 266 சதுர மீற்றர்கள் பரப்பளவு பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றி அழிக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நிலப்பரப்பில் 85 சத வீதம் விவசாயப் பிரதேசங்களாகவும், 10 சத வீதம் உட்கட்டுமானப் பிரதேசங்களாகவும், 5 சத வீதம் வனப் பிரதேசங்களாகவும் உள்ளன.
மக் நிறுவனம் மேற்கொண்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றல் மூலம் 4488 பொதுமக்கள் நன்மையடைந்திருக்கின்றார்கள்.

இந்த மாவட்டத்திலிருந்து மொத்தமாக 425 நிலக்கண்ணிவெடிகளும், (Land Mines and UXO) யூஎக்ஸ்ஓ களும் பாதுகாப்பாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் மக் (MAC) நிறுவனம் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனது நிலக்கண்ணிவெடிகள் அகற்றல் பணியை மேற்கொண்டுள்ளது.

இதனால், நேரடியாக 50 ஆயிரம் பொதுமக்கள் நன்மையடைந்திருப்பதோடு வடக்கு கிழக்கில் 34 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு பிரதேசங்கள் கண்ணிவெடிகள் அற்ற பாதுகாப்பான பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஆயினும், இன்னமும் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்றது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …