தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ அசிஸ் போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் கடத்தல்காரர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகர் பகுதியில் இருந்து அசிஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு சிலர் கடத்த முயல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் அசிஸ் போதைபொருள் இருந்துள்ளது.
இதனையடுத்து முச்சக்கரவண்டியில் இருந்த சிலர் தப்பியோடிய நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அசிஸ் போதைப்பொருளை கடற்கரைக்கு கொண்டு சென்று, பின்னர் அதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடற்கரைக்குச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருளை பெறுவதற்காக காத்திருந்த குழுவினரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். இதன்போது குறித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.