Sunday , May 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இறுதி தீர்மானத்தை எடுக்க ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது சுதந்திரக் கட்சி

இறுதி தீர்மானத்தை எடுக்க ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது சுதந்திரக் கட்சி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்கப்பளிப்பதா? என்று ஆராய்ந்து இறுதித் முடிவெடுக்கும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டுமம் கூட்டப்படவுள்ளது.

கடந்தவாரம் கட்சியின் மத்தியசெயற்குழு இவ்வார ஆரம்பத்தில் கூட்டப்பட்டு சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் உள்ள+ராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பிய பின்னர் மீண்டும் மத்திய செயற்குழு கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணியால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது எதிர்வரும் 4ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. குறித்த தீர்மானத்தை தோற்கடிக்கும் வகையில் பிரதமர் சகல தரப்பினருடமும் ஆதரவு கோரிவருகிறார்.

அரசின் பங்காளிக் கட்சிகளான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பலக் கட்சிகள் எதிரணியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிக்க நேசக்கரம் நீட்டியுள்ளன. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதமருக்கு ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அரசின் பிரதானக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இத்தருணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஜே.வி.பி. எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. சு.க. எதிரணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி வெற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

ஏற்கனவே, சு.கவில் 4 பேர் பிரேரணைக்கு ஆதராக கையொப்பமிட்டுள்ளதால் கட்சிக்குள் பனிப்போரும் வெடித்துள்ளது. சிலர் பிரேரணைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் செயற்பட்டு வருவதால் அனைவரும் கூடி ஒருமித்த தீர்மானத்திற்குவரும் நோக்கில் மத்திய செயற்குழு கூட்டப்படவுள்ளது.

பாகிஸ்தானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இறுதித் தீர்மானம் எடுக்கும் முகமாக இவ்வாறு சு.கவின் மத்தியகுழு கூடவுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …