மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிற்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை, அரசாங்கத்தில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவியை பதவி நீக்குவது அல்லது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறாறில்லாவிட்டால், அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக செயற்படுவோம் என்று அமைச்சர் தயாசிறி உள்ளிட்ட சிலர் ஏற்கனவே பகிரங்கமாக தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஒன்றிணைந்த எதிரணியின் 32 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.