கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுஹான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியுள்ளது . சினா மட்டுமல்லாது உலக நாடுகளையும் இது தற்பொழுது அச்சுறுத்தி வருகிறது .
இந்நிலையில் ஜப்பான் தென் கொரியா நாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது .
ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை வைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரையில் சீனாவில் மட்டும் சுமார் 2858 பேர் உயிரிழந்தனர் , சுமார் 78,000 அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள ஈராட் இத்தாலி தென்கொரியாவில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது . தென் கொரியாவில் இந்த வைரசுக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஜப்பானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது . இதுவரையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இத்தாலியிலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது .
தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளிளும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் இரு நாட்டினருக்கும் விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது .
மேலும் மாதம் சுற்றுலா விசாவில் வருபவர்களையும் மறு உத்தரவு வரும் வரை விமான நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது .
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




