Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திருகோணமலையில் யுவதி சடலமாக மீட்பு

திருகோணமலையில் யுவதி சடலமாக மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசபிள்ளை கார்த்திகா எனும் 16 வயது சிறுமியின் சடலமே நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் மூதூர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மூதூர் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

எனினும் சிறுமியின் தற்கொலைக்கு “காதல் விவகாரமே” காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், யுவதியின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அத்துடன், இதன் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv