Thursday , October 16 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நீங்கலாம் என்ன முதல்வர்: எடப்பாடியை போட்டு தாக்கிய ஸ்டாலின்!

நீங்கலாம் என்ன முதல்வர்: எடப்பாடியை போட்டு தாக்கிய ஸ்டாலின்!

ஸ்டெர்லைட் பிரச்சனையில் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூற பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு நேரடியாக சென்றனர். ஆனால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள் செல்லவில்லை.

இது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பட்டது அதற்கு அவர், தூத்துகுடியில் 144 தடை போடப்பட்டிருக்கிறது, நான் சட்டத்தை மதிப்பவன். அதனால் செல்லவில்லை என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் முதல்வரின் இந்த விளக்கத்திற்கு படஹிலடி கொடுத்துள்ளார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். அவர் கூறியதாவது, 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது தெரியாமல் தமிழ்நாட்டு முதல்வர் உள்ளார்.

இந்த அடிப்படை கூட தெரியாத ஒரு முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார். திமுக நடத்துவது நாடகம் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், அதிமுக நடத்துவது கபட நாடகம். எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை கண்டு கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv