Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா

ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா

ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா

ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும், ஸ்ரீ லங்கா படையினர் கேட்பாரின்றி தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் நடந்த பகுதிகளில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட சூழலிலேயே நாளாந்த வாழ்க்கையை கழிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களும் தொடர்ந்து இடம்பெறுவதாக யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச காலத்தில் பொறுத்துக்கொள்ளாத, விரக்தியை வெளிப்படுத்தியவர்கள் இப்போது, மேலதிக கால அவகாசத்தைக் கொடுக்க விரும்புகிறார்கள்.

தென் பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், வடக்கின் சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, முறைப்படுத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை செய்ய புதிய அரசாங்கம் எதையுமே செய்யவில்லை என சூகா குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …