Thursday , November 21 2024
Home / முக்கிய செய்திகள் / ‘சூழல் புனிதமானது’ நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் கண்டியில் ஆரம்பம்!

‘சூழல் புனிதமானது’ நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் கண்டியில் ஆரம்பம்!

சர்வதேச வெசாக் விழாவினை முன்னிட்டு ‘சூழல் புனிதமானது’ என்ற நிகழ்ச்சித்திட்டம் கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட மேற்படி திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாக கெட்டம்பே விளையாட்டு மைதானம் சுத்திகரிக்கப்பட்டது. ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப மத்திய மாகாண சபையினால் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கண்டி நகரத்தின் முக்கிய இடங்களை துப்பரவு செய்யும் பணிகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகைக்கு வரும் பக்தர்கள் கைகளை கழுவுவதற்கான இரண்டு உபகரணங்கள் இதன்போது ஜனாதிபதியினால் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவிடம் கையளிக்கப்பட்டது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv