உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு
உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3-வது இடத்தை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரமும் 4-வது மற்றும் 5-வது இடங்களை ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன.
ஆசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிங்கப்பூர் இந்தப் பட்டியலில் 25-வது இடத்தையும், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரம் இதில் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் பாக்தாத் உலகின் மோசமான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து 8-வது வருடமாக வியன்னா இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.