உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி(46) என்ற பெண்ணுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார்.
கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23-ம் தேதி கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை வளர்மதிக்கு 8 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த 9-வது அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வளர்மதி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.