Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / திடீர் சிங்கப்பூர் பயணம் ஏன்?

திடீர் சிங்கப்பூர் பயணம் ஏன்?

ஆர்.கே.நகர் தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிமிடத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு உள்பட பல வியூகங்களை அமைத்து வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியில்லை என தேமுதிக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் விஜயகாந்த் சிங்கப்பூர் செல்லவிருப்பதால் அவர் யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது குறித்து அக்கட்சியின் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகையில், ‘விஜயகாந்தின் சிங்கப்பூர் பயணம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கே என்றும், சிங்கப்பூரில் ஒருவாரம் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பின்னர் அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv