ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கலைத்தேன் என சிறிசேன முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியை கொலை செய்வதற்கான கொலை சதிதொடர்பில் இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.