மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சசிகலாவை, திடீரென அவரை ஒதுக்குவது ஏன் என அவரது ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதி வினவியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, ” இன்றிருக்கும் முதலமைச்சரை சசிகலா தான் அமர வைத்தார்.
சசிகலாவும் சரி.. டிடிவி தினகரனும் சரி.. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தான் சொல்கிறார்கள். முதலமைச்சரை நான் கேட்பதெல்லாம், எங்களை ஏன் தனிமைப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை.
33 வருடங்கள் ஜெயலலிதாவுடன் சசிகலா ஒன்றாக இருந்தவர் தானே..? அவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=M3jscVQr7y0