Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திருடர்களை பிடிக்கும் பதவியை ரணிலிடம் மைத்திரி வழங்கியது ஏன்?

திருடர்களை பிடிக்கும் பதவியை ரணிலிடம் மைத்திரி வழங்கியது ஏன்?

கடந்த உள்ளூராட்சி தேர்தல் மேடைகளில் ரணில் திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது திருடர்களை பிடிக்கும் கடமையை பிரதமர் ரணிலிடம் ஒப்படைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் ஊடாக பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், அவரது பதவியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

எனினும் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பிரதமருக்கு வழக்கப்பட்டுள்ளது.

இது ஜனாதிபதியின் தோல்வியா அல்லது மக்களை நகைச்சுவையாளர்களாக்குகின்றாரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

அப்படியாயின் தனது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக திருடர்களை பிடிக்கும் பொறுப்பை பிரதமரிடம், ஜனாதிபதி வழங்கியுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் தற்போது பிரதமருக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான பொறுப்பாகும்.

தொடர்ந்து ராஜபக்சர்களை பாதுகாப்பதாக பிரதமர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு இம்முறை பதிலளிக்கும் பொறுப்பு பிரதமருக்கு ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv