Wednesday , February 5 2025
Home / முக்கிய செய்திகள் / வித்­தியா வழக்­கு விவகாரம் இரா­ஜாங்க அமைச்­ச­ரின் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்?

வித்­தியா வழக்­கு விவகாரம் இரா­ஜாங்க அமைச்­ச­ரின் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்?

சிறு­மியை மிரு­கத்­த­ன­மா­கக் கொலை செய்த சுவிஸ் குமாரை விடு­வித்த குற்­றச்சாட் டில் பொலிஸ் அதி­கா­ரியை சிறை­யில் அடைத்­துள்­ளீர்­கள்.

அந்­தப் பொலிஸ் அதி­கா­ரிக்கு, சுவிஸ்­கு­மாரை விடு­விக்­கச் சொல்லி உத்­த­ர­விட்ட இரா­ஜாங்க அமைச்­சர் சபை­யில் இப்­போ­தும் இருக்­கின்­றார். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விம­ல­வீர திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த நாட்­டில் நீதித்­து­றைக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் வடக்­குக்கு ஒரு நீதி, தெற்­குக்கு ஒரு நீதி என்ற அடிப்­ப­டை­யி­லேயே அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

நீதி­மன்ற உத்­த­ரவை மீறிப் போராட்­டம் செய்­தார்­கள் என்று தெற்­கில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கூடக் கைது செய்­கின்­றார்­கள். ஆனால் வடக்­கில் நீதி­மன்ற உத்­த­ரவை மீறிப் போராட்­டம் நடத்­து­ப­வர்­கள் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

வடக்­கில் சிறு­மியை குருதி சிந்த மிரு­கத்­த­ன­மா­கக் கொலை செய்த சுவிஸ்­கு­மாரை விடு­வித்த குற்­றச்­சாட்­டில் பொலிஸ் அதி­கா­ரி­யைக் கைது செய்­துள்­ளீர்­கள்.

அந்­தப் பொலிஸ் அதி­கா­ரியை அவ்­வாறு செய்­யச் சொல்லி உத்­த­ர­விட்ட இரா­ஜாங்க அமைச்­சர் இந்­தச் சபை­யில்­தான் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்.

அவர் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஏன் இந்த பார­பட்­சம்? என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv