Saturday , August 23 2025
Home / சினிமா செய்திகள் / பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்: தாடி பாலாஜி மனைவி

பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்: தாடி பாலாஜி மனைவி

தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி அவரது மனைவி இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்த முயற்சியால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தாடி பாலாஜி இருந்தும் நான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்பது குறித்து அவரது மனைவி நித்யா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பாலாஜியுடன் மீண்டும் சமாதானமாகி சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை. அவர் திருந்திவிட்டேன் என்று பலமுறை கூறியதை கேட்டு ஏமாந்துவிட்டேன்.

எனக்கும் எனது மகளுக்கும் தற்போது பொருளாதார தேவை அதிகமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அந்த தேவை பூர்த்தியாகும் என்று நினைக்கின்றேன். அதுமட்டுமின்றி எனது மகள் சம்மதித்ததால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். என்னை தேர்வு செய்த விஜய் டிவிக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv