Thursday , February 6 2025
Home / சினிமா செய்திகள் / இன்று உலகமே கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமான் அன்று தாயுடன் நடுரோட்டில் நின்றது தெரியுமா?

இன்று உலகமே கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமான் அன்று தாயுடன் நடுரோட்டில் நின்றது தெரியுமா?

இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். அந்த அளவிற்கு அனைவரையும் தனது இசையினால் கட்டிப்போட்டுள்ளார்.

ஆனால் இந்த இடத்தினை அடைவதற்கு இவர் கடந்து வந்த பாதைகள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுவயதில் தந்தையை இழந்த இவர் பல கஷ்டங்களை கடந்துள்ளார்.

பள்ளிப்பருவமான 10ம் வகுப்பு முடித்ததும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் சென்றார். அதன்பின்பு சில நாட்களுக்கு கழித்து 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

அத்தருணத்தில் பள்ளிக்கு சரியாக வராத காரணத்தினால், பள்ளி ஆசிரியர் ஒருவர் ரகுமான் அம்மாவை அழைத்து ‘உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கம் ரோட்டிற்கு செல்லுங்கள். இந்த பள்ளியில் இவனுக்கு இடமில்லை’ என்று கூறி அனுப்பிவிட்டார்களாம், அன்று தன் அம்மா மிகவும் வருத்தப்பட்டதாக ரகுமான் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv