“எமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிப்பது என்பது குறித்து இன்றுதான் நாம் முடிவை அறிவிப்போம்.”
– இவ்வாறு ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் பெயரை, கட்சியின் செயலாளர் ந.சிறீகாந்தா முதலமைச்சருக்கு எழுத்துமூலமாக நேற்று அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது கட்சியின் சார்பில் அமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும். எமது கட்சியின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அதனைத் தெரியப்படுத்துவார்” – என்றார்.