நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம் என்பதனை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைவதற்கு மத்திய வங்கியின் சில அதிகாரிகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கியின் சில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.