Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / “எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு, தெற்கில் போராட்டம் 

“எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு, தெற்கில் போராட்டம் 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பிலும் நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.
வலிந்து காணாமல்போகச்செய்யப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட சமூகத்தினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக  சுடரேற்றி போராட்டங்களை ஆரம்பித்தனர்.
“எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?”, “நல்லாட்சி அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு”, “இரகசிய சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டுத் தா”, “இனியும் நாம் ஏமாறத் தயாரில்லை”, “இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைத் தா”, “அரசே இனியும் காலத்தைக் கடத்தாதே!” எனப் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கோஷங்களையும் எழுப்பினர்.
போராட்டங்களின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஐ.நா. அலுவலகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமும், மாவட்ட அரச அதிபர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் கையளித்தனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv