முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகிய இரண்டும் பல நடிகர்களை அரசியலுக்கு இழுத்துள்ளது.
நடிகர்களில் பலர் கட்சி ஆரம்பிக்கவும், முதல்வர் கனவில் மிதக்கவும் ஆரம்பித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார்., ரஜினியும் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிகக்வுள்ளார். இவர்கள் மட்டுமின்றி விஜய், விஷால், பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் குதிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை தெரிவிக்கவுள்ளதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அவரை அடுத்து அவரது மகன் சிம்புவும்
தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும்
ரஜினி, கமல் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றும் நான் ஒரு சாதரண நடிகன் என்று தெரிவித்துள்ளார்.