Monday , June 17 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது

தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து பலரும் விமர்சிக்கின்றனர்.

கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி பிரச்சனை வந்தபோது நடிகர் ரஜினி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது அரசியலில் இறங்கியுள்ள ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் எந்த காரணத்துக்காகவும் தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற தனது நண்பர் அம்பரீஷின் கடிதத்துக்கு ரஜினி என்ன பதில் சொல்லப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. மௌனம் கலைப்பாரா ரஜினி?.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv