Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிரபாகரன் அன்று சொன்னது இன்று புரிகின்றது!

பிரபாகரன் அன்று சொன்னது இன்று புரிகின்றது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கூறியது இன்று புரிந்துகொள்ள முடிகின்றதாக பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே. பிரபாகரனுக்கு அன்று புரிந்த விடயம், இப்போதே எமக்கு புரிந்துள்ளது.

அரசியலில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் மிகத் தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார்.

இந்நிலையில், நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக உள்ளன. எனினும், இரண்டு தரப்பினரின் கோரிக்கைகளையும், கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் நிறைவேற்றவில்லை.

இதேவேளை, சிறைச்சாலையில் தனக்கு காற்சட்டையை அணிவிக்க முயற்சிக்கப்பட்ட போதும், தான் அதனை அணியவில்லை. சிறையில் இருந்த ஐந்து நாட்களும் தான், காவி உடையை கழற்றி வைத்து விட்டு, சாரமும் சட்டையும் அணிந்திருந்தேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv