கேட்டலோனியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்களில் பெரும்பாலானோர் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாக ஆக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கேட்டலோனியா மாநில அரசு விடுதலை அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ள அதேநேரத்தில் ஸ்பெயின் அரசு கேட்டலோனிய ஆட்சியைக் கலைத்துவிட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
நெருக்கடியான காலக்கட்டத்தில் இதுபற்றி விவாதிப்பதற்காக மாட்ரிட்டில் ஸ்பெயின் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைப் பிரதமர் மரியானோ ரஜோய் கூட்டியுள்ளார். கேட்டலோனியா ஆட்சியைக் கலைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும் எனக் கூறப்படுகிறது.