Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த – மைத்திரிக்கு எதிராக மேற்குலக நாடுகள்

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக மேற்குலக நாடுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே புதிய பிரதமரையும், அரசையும் நியமித்தார்.

அதற்கு எதிராக மேற்குல நாடுகளின் தூதுவர்கள் செயற்படுகின்றனர். தமக்கு தேவையான ஜனாதிபதி, பிரதமரை நியமிக்கவே அவர்கள் முற்படுகின்றனர்.

2014 ஆம் ஆண்டு தலைதூக்கிய சக்திகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. அன்றுபோல் இன்றும் போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்ட போது அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக வாசித்தார்களா தெரியவில்லை. அவ்வாறு வாசித்திருந்தால் அப்படியானதொரு சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கியிருக்கமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv