Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திருட்டு வழியில் சஜித்தை ஜனாதிபதியாக்க மாட்டோம்

திருட்டு வழியில் சஜித்தை ஜனாதிபதியாக்க மாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமான முறையில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மாற்ற மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

நேற்று (23) மாலை மாத்தறையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

பொதுமக்களின் பலத்தினுாடாக சரியான முறையான வழிமுறையில் ஆட்சி பீடம் ஏற்றுவோம் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் ஐ.தே.க.யின் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமாக ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுத்துவருவதாக எதிர்க் கட்சியினர் கூறியிருந்தார். அது அப்பட்டமான பொய்யாகும். எமக்கு அப்படியான ஒரு தேவை இல்லை. நாம் சஜித்தை முறையான வழிமுறையில்தான் ஜனாதிபதி வேட்பாளராக மாற்றுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv