அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது.
சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பல இடங்களில் கரும்புகை சூழ்ந்து உள்ள நிலையில், நிலப்பரப்பை உடைத்து கொண்டு எரிமலை குழம்பு வெளியேறும் காட்சிகள் இணையத்தில் கசிந்து வருகிறது.
அதோடு, வீடுகளைவிட்டு வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்கு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் அவசர கால முகம் ஒன்றை அமைத்துள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9-ஐ கடந்ததால், எரிமலை வெடித்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.