புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.