Wednesday , August 27 2025
Home / முக்கிய செய்திகள் / வித்தியா கொலை வழக்கு – 7 பேருக்குத் தூக்கு!!

வித்தியா கொலை வழக்கு – 7 பேருக்குத் தூக்கு!!

1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

7 பேருக்கு தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்தது. நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலா 30 ஆண்டு ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரையில் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தினுள் ஓலமிட்டு கதறி அழுகின்றனர்.

2 வது எதிரி – பூபாலசிங்கம்  ஜெயக்குமார்
3 வது எதிரி – பூபாலசிங்கம் தவக்குமார்
4 வது எதிரி – மகாலிங்கம் சசீந்திரன்
5 வது எதிரி – தில்லைநாதன் சந்திரகாசன்
6 வது எதிரி – சிவதேவன் துசாந்த்
8 வது எதிரி -ஜெயதரன் கோகிலன்
9 வது எதிரி – மகாலிங்கம் சசிக்குமார்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv