ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள சென்னை ஆர்கே நகர் தேர்தல் வரும் வரும் 21ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிட விஷால் மனுதாக்கல் செய்தார். ஆனால் நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவிருக்கிறேன் என்று அறிவித்தார். அதனையடுத்து யாரையும் ஆதரிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டார். எனவே இவர் விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விஷால் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பேட்டியொன்றில் இப்போது கட்சி தொடங்கும் எண்ணமில்லை. ஆனால் தொடங்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லமுடியாது என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ரஜினி, கமலே கட்சி தொடங்க தயங்கி வரும் நிலையில், விரைவில் அரசியலில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.